வனம்- விமர்சனம்
வானாதிராயன் மேற்குத் தொடர்ச்சி மலை அருகேயுள்ள சமஸ்தானத்தின் மன்னர்.. அவர் கலைப்பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். மேலும் பெண்களை பெருங்கொடுமையும் செய்வார். அவரின் ஆன்மா அடுத்த ஜென்மத்திலும் பிறக்கிறது. வானாதிராயனால் பாதிக்கப்பட்ட மல்லி என்ற மலைகுடி மக்களின் பிரதிநிதியும் வானாதிராயனை பலிவாங்க அடுத்த ஜென்மத்தில் பிறக்கிறார். முன் ஜென்மப்பகை. இந்த ஜென்மத்தில் என்னானது என்பதே வனம் படத்தின் கதை
மெயின் கதை இதுவாக இருந்தாலும் கதையின் தொடக்கம் ஒரு கலைக் கல்லூரியில் நடக்கும் தற்கொலைகளில் இருந்து துவங்கிறது. மிகவும் எதிர்பார்ப்புமிக்க ஆரம்பம் அது. ஆரம்பம் போல முடிவும் இருக்கணுமா என்ன? என்று இயக்குநர் நினைத்தது யார் செய்த குற்றமோ?
படத்தின் நாயகன் வெற்றி நடிப்பில் இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். இயல்பாக நடிக்கிறார் என்றாலும் எமோஷ்னல் காட்சிகளில் அவரின் பங்களிப்பு பத்தாது. ஸ்ம்ருதி வெங்கட் அனு சித்தாரா என இரு நாயகிகள். இருவருமே ஓரளவு ஸ்கோர் செய்கிறார்கள். வேல. ராமமூர்த்தியின் வில்லத்தனத்தை விட அவரின் வீட்டு செட்டப் நன்றாக இருக்கிறது. படத்தில் சிஜி வொர்க் பிரமாதமாக இருக்கிறது. அப்படியே ஒளிப்பதிவும் கன கச்சிதம். விக்ரம் மோகனை இனி கேமராமேனாக நிறைய படங்களில் பார்க்கலாம். ரான் ஈத்தன் மோகனின் பின்னணி இசை இன்னும் வலிமையானதாக இருந்திருக்கலாம். படத்தில் ஒரு மெலடி பாடல் மட்டும் லேசாக ஈர்க்கிறது
திரைக்கதைக்கு மட்டும் மூன்றுபேர் உழைத்துள்ளார்கள். ஆனாலும் படத்தை நம்மோடு கனெக்ட் செய்ய தவறிவிட்டார்கள். படத்தின் ஸ்டேஜிங்கிலும் நிறைய பிழைகள் நடந்துள்ளது. இயக்குநர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஏன் என்றால் இப்படத்தின் அடிப்படை கதை மிகவும் சுவாரசியமானது.
படத்தின் விஷுவல் நன்றாக இருக்கிறது. சில வித்தியாசமான முயற்சிகள் ஓரளவு ஈர்க்கிறது. மற்றபடி வனம்/ரணம்
2.5/5