வேலன்- விமர்சனம்
2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லாத 2000 கால கட்டத்தில் வந்திருக்க வேண்டிய
படம். இப்போதுள்ள 2k கிட்ஸுக்கு இந்த வேலன் எப்படி வினையாற்றுவான்?
ஊரில் பெரும்புள்ளி பிரபுவின் மகன் முகேனுக்கு கல்லூரியில் ஒரு பெண் மீது காதல். அந்தப்பெண்ணுக்கு முகேன் ஆள் வைத்து மலையாளத்தில் ஒரு கடிதம் எழுத, அந்தக் கடிதத்தால் பெண்ணே மாறிப்போகும் அளவிற்கு ஒரு சிக்கல் எழுகிறது. முடிவில் சிக்கல் எப்படி அவிழ்ந்தது? என்பதே கதை
பிக்பாஸ் புகழ் முகேன் பிசிறு தட்டாமல் நன்றாகவே நடித்துள்ளார். காதல் காட்சிகளில் இளைஞர்கள் இளைஞிகளை கவரும் வண்ணம் இருக்கிறது அவரின் துள்ளல் பெர்பாமன்ஸ். பிரபுவிற்கு feel பண்ணுவதை தவிர பெரிய வேலை ஒன்றுமில்லை. தம்பி ராமையா சில இடங்களில் வெடி..பல இடங்களில் கடி. சூரி தான் படத்தில் மாஸ் காட்டியிருக்கிறார். ஹரிஷ் பெரோடியின் கேரக்டர் படத்திற்கு துளியும் வலு சேர்க்கவில்லை
படத்தின் பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவிலும் கோவை பொள்ளாச்சி அழகு ஆட்சி செய்கிறது
சீட்டு நுனியில் இருந்தபடியே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு கன்டென்ட் இருந்தும் மிகவும் பழைய ஸ்டைல் திரைக்கதையால் படத்தை தேக்கிவிட்டார் இயக்குநர் கவின். முனைப்போடு திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் வேலன் கெத்து காட்டியிருப்பான். போங்க பாஸ் மிஸ் பண்ணிட்டீங்க..
2.5./5