விஜய் டிவி ‘ஆபீஸ்’ சீரியல் புகழ் கார்த்திக்ராஜ் – நிரஞ்சனா நடிக்கும் 465 ‘நாலு ஆறு அஞ்சு’!

Get real time updates directly on you device, subscribe now.

456-movie

ஸ்.எல். பிரபு-வின் “எல்.பி.எஸ். பிலிம்ஸ்” தயாரிப்பில், சாய் சத்யம் இயக்கத்தில் “விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ்” பெரியதிரைக்கு வருகின்றார்.

விஜய் டிவியின் “கனா காணும் காலங்கள்” மற்றும் “ஆபீஸ்” தொடர்களின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றவர் கார்த்திக்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற தமிழ் படத்தின் மூலம் பெரிய திரையில் அவருடைய முதலாவது பயணத்தை தொடங்குகிறார்.

ஒரு சிறந்த நடிகராக அறிமுக இயக்குனர் “சாய் சத்யம்” இயக்கத்தில் 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற படத்தின் மூலம் வருகிறார். வேறு எந்த இயக்குனர்களின் உதவியும் இல்லாமல் தனியாக தன்னை ஒரு இயக்குனராக வளர்த்துக் கொண்டவர் “சாய் சத்யம்”. மேலும் அவருடைய சுவாரஸ்யமான திரைக்கதையை “465 (நாலு ஆறு அஞ்சு)” மூலம் சொல்லியிருக்கிறார். நாயகி நிரஞ்சனா ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராட்டிணம் மற்றும் கோ2 படங்களில் பணியாற்றிய பிலிப் ஆர். சுந்தர் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இசை புகழ் திரு. எ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

“பிச்சைக்காரன்” மற்றும் “சைத்தான்” படங்களில் எடிட்டராக பணியாற்றிய ஜி.ராஜராஜன் அவர்கள் “465 (நாலு ஆறு அஞ்சு)” படத்திற்கும் எடிட்டிங் மற்றும் கலரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார். மேக் ரியல் மீடியா பாலமுருகன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்துள்ளார்.

சுவாரஷ்யமான திரில்லர் கதையாக “465 (நாலு ஆறு அஞ்சு)” படத்தை ரசிகர்கள் விரும்பி பார்க்கும் விதத்தில் இயக்கியிருக்கின்றார் இயக்குனர் சாய் சத்யம்.