வேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”!

Get real time updates directly on you device, subscribe now.

தயாரிப்பாளர் கலைமாமணி Dr ஐசரி K கணேஷ் அவர்கள் Vels Film International நிறுவனம் மூலம், கடந்த வருடங்களில் பல புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, வெற்றிபெறச்செய்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் மேலும் பல புதிய இளம் திறமைகளின் திரைப்படங்கள் இந்தாண்டு அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன. இளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய தளமொன்றை Dr ஐசரி K கணேஷ் நிறுவியுள்ளார். இந்நிறுவனம் Conzept Note நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும், புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவிக்கும்.

Conzept Note சார்பாக திரு. ஷியாம் ஜாக் கூறியதாவது…

தென்னிந்திய திரைத்துறையின் பெருமை மிகு அடையாளங்களுல் ஒன்றான Vels Film International நிறுவனத்துடன், திரைத்துறையில் ஆர்வத்துடன் சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை அடையாளப்படுத்தும், இந்த புதிய பயணத்தில் இணைந்திருப்பது மிகபெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரைப்படங்களை போலவே குறும்படங்கள், இசை ஆல்பங்கள், டாக்குமெண்ட்ரி படங்கள் மக்களை சென்றடைவதில் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனை முற்றிலும் மாற்றும் வகையில் குறும்படங்கள் முதல் இளம் திறமையாளர்களின் படைப்புகளை, பெரும் மக்கள் திரளிடம் எடுத்து செல்லும் பணியினை Vels Signature நிறுவனம் செய்யவுள்ளது. திரைத்துறையில் சாதிக்க ஆசைப்படும் தீவிர படைப்பாளிகளுக்கு உரிய அடையாளத்தை பெற்று தரும் வகையில் செயல்படவுள்ளது.