வெல்வெட் நகரம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கல்வெட்டுல எழுதி வைக்கிற அளவுக்கு ஒர்த் இல்லாட்டியும் ஓரளவு என்கேஜிங்காக படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள் வெல்வெட் நகரம் அணியினர்.

நடிகையான கஸ்தூரி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவர் கொலைக்கான காரணம் என்ன? எதனால்? ஏன் என்பதை நாயகி வரலெட்சுமி தேட…தொடர்கிறது அடுத்தடுத்த அத்தியாயங்கள்.

வெல்வெட் நகரத்தின் மின்மினிகளாய் கவனம் ஈர்ப்பது ஒருசில கதாப்பாத்திரங்கள் தான். துண்டு ரோலாக இருந்தாலும் கஸ்தூரி சிறப்பு. ரமேஷ் திலக் நல்ல பெர்பாமன்ஸ் காட்டியுள்ளார். கதையின் நாயகி மற்றும் கதாநாயகி வரலெட்சுமியின் முழுத்திறமையையும் இயக்குநர் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் கவனம் ஈர்க்கத் தவறவில்லை நம்ம வரு.

இருட்டில் தான் பெரும்பாலான படம். அதைக் கச்சிதமாக கேமராவிற்குள் அழகியலோடு தந்துள்ளார் ஒளிப்பதிவாளர். சரண்ராஜனின் பின்னணி இசை போதுமான அதிர்வைத் தராததும் ஏமாற்றம். திரைக்கதையில் சில புத்திசாலித்தனங்கள் இருந்தாலும் அதை காட்சி வடிவில் காணும் போது ஒரு நம்பகத்தன்மை ஏற்பட வேண்டும். வெல்வெட் நகரம் சறுக்கி இருப்பது அங்குதான். இருந்தாலும் நிறைய அறிமுக கலைஞர்கள் சேர்ந்து இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எப்படியும் அடுத்த முறை ஜொலிப்பார்கள் என்றே நம்புவோம்!
2.5/5