‘சாதி’ப்பெயர் நடிகைகளுக்கு சவுக்கடி கொடுத்த பார்வதி!

Get real time updates directly on you device, subscribe now.

parvathy1

தாங்கள் சார்ந்திருக்கும் ஜாதியை பெயரோடு ஒட்டிக்கொண்டு நடிக்க வரும் நடிகைகள் அதிகம்.

அதிலும் கேரளாவிலிருந்து மேனன்களும், நாயர்களும், பிள்ளைகளும் கொஞ்சமும் கூச்சப்படாமல் தங்கள் பெயரோடு சாதியை சேர்த்துக் கொண்டு நடிக்க வருகிறார்கள்.

லட்சுமிமேனன், ரேஷ்மிமேனன், நவ்யாநாயர், ரம்யாநம்பீசன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

நடிகைகளில் இந்த சாதிவெறிக்கு சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறார் அதே கேரள தேசத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் பார்வதி.

கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானர். பூ பார்வதி என்றால் எல்லோருக்கும் தெரியும். அந்தளவுக்கு அந்தப்படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியிருந்தார்.

தொடர்ந்து தனுஷூடன் மரியான் உட்பட சில படங்களில் நடித்த பார்வதிக்கு தனது பெயருடன் மேனன் என்ற சாதிப்பெயரை சேர்ப்பதில் உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

சாதியை ஒழிக்கணும், ஒழிக்கணும்னு எல்லோரும் போராடிக்கிட்டு இருக்காங்க, இந்த சிச்சுவேஷன்ல பெயரோட சாதியை சேர்த்துக்கிறதுல எனக்கு இஷ்டமே இல்லை. சென்னையில கூட உள்ள தெருக்கள் பேர்ல இருக்கிற ஜாதிப்பெயர்களை நீக்கினதா நான் கேள்விப்பட்டேன். இது வரவேற்க வேண்டிய விஷயம். அதேமாதிரி புராணங்கள், கார்ட்டூன்களில் கருப்பா இருக்கிறவங்க தான் தப்பு செய்வாங்கன்னு காண்பிக்கிறாங்க. இது ரொம்பத் தப்பு என்று சிந்தனை சிற்பியாக பேசியிருக்கிறார் பார்வதி.