ஆஹா OTTல் வெளியாகிறது வேம்பு!

Get real time updates directly on you device, subscribe now.

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

வேம்பு திரைப்படம் பெண்ணியம் பேசும் படம்.

பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் பெண் மீதுதான் கட்டமைக்கபட்டிருக்கிறது. இச்சமூகம் பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உடை உடுத்தக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறது. பெண்ணானவள் எப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் யார் நல்லவள் யார் கெட்டவள் என்பதைப் பற்றி பேசுகிறது. எத்தனை மணிக்கு உறங்க வேண்டும் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதைப் பேசுகிறது. விதிவிலக்கு இல்லாமல் எல்லா மதமும் இதைத்தான் பேசுகிறது, வயசுக்கு வந்தவுடன் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது கணவனை இழந்த பெண் எந்த ஒரு காரியத்திற்கும் முன் நிற்கக் கூடாது, ஆணுக்குச் சமமான வாழ்க்கையை ஒரு பெண்ணால் வாழ முடிகிறதா என்றால் அது இன்று வரை சாத்தியமற்று தான் இருக்கிறது,

இப்பேற்பட்ட சூழல்களைக் கடந்து ஒரு பெண் தனது தனிமை வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் துணிச்சலாக செயல்பட்டு தன் லட்சியத்தை எவ்வாறு அடைகிறாள் என்பதை பற்றி வேம்பு படம் வலியுறுத்துகிறது.

மே-23ஆம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்ற வேம்பு திரைப்படம் செப்டம்பர் -12 ஆம் தேதி நாளை ஆஹா ஓடிடி -இல் வெளியாகிறது.

அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான இந்தப்படம், சிறந்த நடிகர் ஹரிகிருஷ்ணன், சிறந்த நடிகை ஷீலா என இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.