அருண் வைத்தியநாதன் இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்!

Get real time updates directly on you device, subscribe now.

பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன், அவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

படத்தைப் பற்றி அருண் வைத்தியநாதன் கூறுகையில், “குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும். அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம்” என்று அருண் கூறினார்.இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருண் வைத்தியநாதன் தயாரிக்கிறார்.