சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” !

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 8

தமிழ் சினிமாவில், திரையில், மேஜிக்கை நிகழ்த்தும் சிலம்பரசன் TR, AR ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி, ஏற்கனவே “விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா” எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றிகளை தந்துள்ளது. இந்த கூட்டணி பற்றி, சிறு செய்தி வெளியானாலும், ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். தற்போது இந்த கூட்டணி, தாங்கள் இணைந்து பணியாற்றவுள்ள படத்தின், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். சிலம்பரசனின் 47 வது படமாக உருவாகும் இப்படம் “வெந்து தணிந்தது காடு” என தலைப்பிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் முற்றிலும் புதிய களத்தில் இப்படத்தை இயக்க, சில்மபரசன் இதுவரை தோன்றியிராத பாத்திரத்தில் நடிக்க மாறுபட்ட புதுமையான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.