விஜய் வாக்கு பலித்தது! : நெகிழ்ந்து போன ஏ.ஆர்.முருகதாஸின் குடும்ப நண்பர்

Get real time updates directly on you device, subscribe now.

vijay

இரண்டு பிரபலங்கள் மத்தியில் திடீர் என்று சந்திப்பு நிகழ்ந்தாலே அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விடும்.

அப்படி ஒரு சந்திப்பு தான் சமீபத்தில் நடந்திருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்.

இரண்டுமே மெகா ஹிட் என்பதால் இந்தக் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வருமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் சில தினங்களுக்கு முன்பு நடந்தேறியிருக்கிறது.

Related Posts
1 of 82

அதற்கு காரணம் ஏ.ஆர்.முருகதாஸின் குடும்ப நண்பராம்.

ஆமாம் ‘கத்தி’ படப்பிடிப்பின் போது ஏ.ஆர்.முருகதாஸின் குடும்ப நண்பர் தனது குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்திருக்கிறார். அப்போது முருகதாஸின் குடும்ப நண்பரின் மகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்தியிருக்கிறார் விஜய்.

அவரது வாழ்த்து தற்போது பலித்துள்ளது. விஜய் வாழ்த்தியதைப் போலவே குடும்ப நண்பரின் மகள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இதனையடுத்து மீண்டும் ஏ.ஆர் முருகதாஸின் குடும்ப நண்பர் தனது மகளுடன் விஜய்யை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

நெகிழ்வான இந்த சந்திப்பின் போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் உடனிருந்தார்.