தயாரிப்பாளரை கதற விட்ட அட்லீக்கு பாடம் புகட்டிய விஜய்!

Get real time updates directly on you device, subscribe now.

‘மெர்சல்’ படம் 250 கோடி வசூலித்தாலும் அந்த பாக்ஸ் ஆபீஸ் வசூலால் படத்தின் தயாரிப்பாளருக்கு நயா பைசா கூட வருமானம் இல்லை.

இதனால் ‘மெர்சல்’ வசூலை நம்பி சுந்தர் சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களை ஆரம்பித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி, ஆரம்பித்த எல்லாப் படங்களையும் ட்ராப் செய்து விட்டது.

ஒரு பாரம்பரிய தயாரிப்பு நிறுவனம் இன்று இந்தளவுக்கு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்க படத்தின் டைரக்டர் அட்லீ தான் காரணம் என்று கோலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும் பரவலாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

”சொன்ன பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டதால் தான் இன்றைக்கு அந்த நிறுவனம் இவ்வளவு பெரிய சிக்கலை சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதனால் இனி கோடம்பாக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் அட்லீ மாதிரியான செலவை இழுத்து விடும் இயக்குனர்களுக்கு பட வாய்ப்பு தரக்கூடாது” என்று எதிர்க்குரல்கள் வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

பொதுவாக கோலிவுட்டில் பிரபல ஹீரோவின் கால்ஷீட் இருந்தால் இயக்குனர்களுக்கு ஈஸியாக தயாரிப்பாளர்கள் கிடைத்து விடுவார்கள். அப்படி ஒரு கணக்குப் போட்டுக் கொண்டு தன்னை தேடி வந்த அட்லீக்கு சரியான பாடத்தைப் புகட்டி திருப்பி அனுப்பியிருக்கிறார் விஜய்.

Related Posts
1 of 85

மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கும் திட்டத்தோடு சில தினங்களுக்கு முன்பு விஜய்யை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்திருக்கிறார் அட்லீ.

அப்போது ”உங்களுடைய அடுத்த படத்துக்கு நல்லதாக ஒரு கதை வைத்திருக்கிறேன். கேட்கிறீர்களா அண்ணா?” என்று விஜய்யிடம் புன்னகை பொங்க கேட்டிருக்கிறார் அட்லீ.

ஆனால் விஜய்யோ ”வெளியில ஒரு படம் பண்ணிட்டு வாங்க, அதுக்கப்புறம் நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம்.

பொக்கிஷம் கிடைக்கும் என்று நம்பிச் சென்றவருக்கு விஜய் லாலிபாப் கொடுத்து அனுப்பியதால் என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கிறார் அட்லீ!