அரசியலில் நுழைய திட்டம்! : சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா உதயநிதி?

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியலுக்குள் நுழைவது தான் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் அந்த விஷயத்தில் மற்றவர்களைப் போல இல்லாமல் நடிப்பு, தயாரிப்பு என முழு நேரமாக சினிமாவிலேயே காலத்தை கடத்தி வந்தார் உதயநிதி.
அப்படியானால் அவர் அரசியலுக்கு வர மாட்டாரா? என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்தது. இந்த சந்தேகத்துக்கு பதில் தரும் விதமாக தயாராகியிருக்கிறதாம் விரைவில் ரிலீசாக இருக்கும் உதயநிதியின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படம்.
ஆமாம், இதுவரை தான் தயாரித்த படங்களில் அரசியலுக்கு வருவதற்கான எந்த முன்னோட்டக் காட்சிகளையும் வைக்க அனுமதிக்காத உதயநிதி இது ஒரு பக்கா அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்று தெரிந்து தான் நடித்திருக்கிறார்.
ஊரில் செல்வாக்குடன் வளைய வரும் ரா.பார்த்திபனை எதிர்க்கும் உதயநிதி, தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பதாகவும் படத்தில் பரபர பொலிடிக்கள் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.
சமீபகாலமாக திமுக நடத்தும் போராட்டங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருக்கும் உதயநிதி, தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கும் இதுவே சரியான தருணம் என்பதால் அரசியலுக்குள் முழு நேரம் இறங்கவும் முடிவு செய்திருக்கிறாராம். அதன் முன்னோட்டமாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படம் அமையும் என்கிறார்கள் அவருடைய விசுவாசிகள்.
ஒருவேளை அப்படி முழு நேரம் அரசியலுக்குள் நுழைந்து விட்டால் சினிமாவுக்கு முழுக்கு போடவும் அவர் முடிவு செய்திருக்கிறாராம். அதனால் தான் கைவசம் இருக்கும் படங்களைத் தவிர புதிதாக எந்தப் படத்தையும் கமிட் செய்யவில்லை உதயநிதி.
பலே திட்டம் தான்!