நாங்க எல்லாரும் தனுஷ் ரசிகர்கள்! : இயக்குநரை வியக்க வைத்த விஜய் அம்மா ஷோபா!

சில சமயங்களில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று வியப்பாக இருக்கும். அதே சமயத்தில் அது சம்பந்தப்பட்டவர்களின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளாக இருக்கும் போது இந்த சமூகம் நம்பித்தானே ஆக வேண்டும்.
கோடிக்கணக்கான தமிழ்சினிமா ரசிகர்கள் நடிகை விஜய்யை மாஸ் ஹீரோவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் வீட்டில் இருப்பவர்கள் தனுஷுடைய ரசிகர்கள் என்பது தான் அந்த வியப்பு.
நேற்று நடந்த தனுஷின் ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த ரகசியத்தை உடைத்தார் அப்படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார்.
இப்படத்தில் பல அரசியல் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவரிடம் நான் முதலில் கதை சொல்ல செல்லும் போது கதையைக் கேட்டு விட்டு நான் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.
சிறிது நேரம் கழித்து எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். முதலில் என்னுடைய இயக்கத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியவர். வீட்டிற்கு சென்று இப்படத்தை பற்றி கூறியதும் ஷோபா மேடம் அவரிடம் தனுஷ் படத்தில் நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம்? நாங்கள் அனைவரும் தனுஷின் ரசிகர்கள். நீங்கள் கண்டிப்பாக ‘கொடி’ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக கூறினார். என்றாரே பார்க்கலாம்.
யார் மனசுல யார் இருக்காங்கன்னு இப்படி ஏதாவது மேடையில சொன்னாத்தான் தெரியுது!