விவேகம் படத்தின் 4 மாத சாதனையை 24 மணி நேரத்துக்குள் முறியடித்த மெர்சல்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு அவருடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் அஜித்தின் ‘விவேகம்’ பட பர்ஸ்ட் லுக் சாதனையை அசால்ட்டாக முறியடித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இயக்குநர் சிவா வெளியிட்ட அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நான்கு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 31,000 பேர் தான் ரீ-ட்வீட் செய்துள்ளார்கள். இதுதான் இதுவரை மிகப்பெரிய சாதனையாக இருந்து வந்தது.
ஆனால் நேற்று வெளியிடப்பட்ட விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சுமார் 40,000 பேர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். இந்த சாதனை விஜய் பிறந்தநாளில் நடந்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரர், டாக்டர், மற்றும் மேஜிக் மேன் என்ற மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கிறாராம் விஜய். ஆகஸ்ட் மாதம் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படம் அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக வர இருக்கிறது.