விரூபாக்ஷா- விமர்சனம்
B&C சென்டர் கேட்டகிரியில் சக்ஸஸ் பார்முலாவுடன் ஒரு பேய்படம்
ஒரு ஊரையே பழிவாங்க வேண்டும் என ஒரு ஆத்மா முடிவெடுக்கிறது. அந்த ஊருக்கு ஹீரோ சாய் தரம் தேஜ் வருகிறார். ஊரிலுள்ள அழகியான சம்யுக்தா மேனனை காதலிக்கிறார். சம்யுக்தா மேனனுக்கும் ஊருக்கும் ஒரே நேரத்தில் பேராபத்து வருகிறது. அந்த ஆபத்தில் இருந்து ஊரை ஹீரோ எப்படி காப்பாற்றினார்? சம்யுக்தாவின் முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை
சூர்யாவாக சாய்தரம் தேஜ் நல்ல நடிப்பை கொடுக்க முயன்றுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அனல் பரத்தும் அவரால் எமோஷ்னல் காட்சிகளில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இருந்தாலும் சமாளிக்கிறார். சம்யுக்தாமேனன் கொடுத்த வேலைக்கு குறைவைக்கவில்லை என்றாலும் சில இடங்களில் அதீத நடிப்பை கொடுத்து டயர்ட் ஆக்குகிறார். மேலும் படத்தில் வில்லன், அக்கா, மந்திரவாதி, பூசாரி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்த அனைவருமே சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்
படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம் ஒளிப்பதிவாளரை. நேர்த்தியான ஒளியை திரையில் பாய்ச்சியுள்ளார். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே படத்தை டிஸ்டர்ப் செய்யாத வகையில் அமைந்துள்ளது. சி.ஜி வொர்க் சிறுபிள்ளைத் தனமாக தெரிந்தாலும் படத்தின் ப்ளோவில் அது அலுக்கவில்லை
பேண்டஸி கலந்த பேய்க்கதை தான் என்றாலும் சுகுமார் அமைத்துள்ள திரைக்கதை படத்தை கனம் குறையாமல் பயணிக்க வைத்துள்ளது. ஒவ்வொரு காட்சிகளுக்குமான ஸ்டார்ட்டிங் எண்டிங் பிரமாதமாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. ஆனால் இந்தப் ப்ளஸ்கள் எல்லாவற்றையும் நீர்த்துப் போகச்செய்துவிடுகிறது படத்தின் எமோஷ்னல் ஏரியா. நன்றாக உழைத்திருந்தாலும் நம்மோடு கனெக்ட் ஆக மறுக்கும் எமோஷ்னல் ரைட்டிங்கை மட்டும் சீர் செய்திருந்தால் படம் இன்னும் ஸ்கோர் செய்திருக்கும்.
விரூபாக்ஷா- கொடுக்கும் காசுக்கு வொர்த்து
3/5
#விருபாக்ஷா #Virupaksha