அழகான த்ரில்லர் படமாக வரும் ‘மெர்லின்’!

Get real time updates directly on you device, subscribe now.

merlin

ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் பெரும் செலவில் தயாரிக்கும் படம் – “மெர்லின்”.

இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் வ. கீரா. இவர் ஏற்கனவே ‘பச்சை என்கிற காற்று’ படத்தை இயக்கியவர்.

விஷ்ணுபிரியன் கதாநாயகனாக நடிக்க, அஸ்வினி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும், ‘ஆடுகளம்,விசாரணை’ முருகதாஸ், லொள்ளு சபா ஜீவா, சிங்கம்புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், ‘கயல்’ தேவராஜ், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீரசந்தானம், வைசாலி ஆகியோர் நடிக்கின்றனர். அட்டகத்தி தினேஷ் நட்புக்காக நடிகராகவே ஒரு காட்சியில் முகம் காட்டுகிறார்.

முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்ய, சாமுவேல் படத்தொகுப்பு செய்கிறார். யுகபாரதி,சாவி, கு.கார்த்திக், வ.கீரா எழுதிய பாடல்களுக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் பெரும் செலவில் தயாரிக்கிறார்.

அதென்ன ‘மெர்லின்’ படத்தைப் பற்றி இயக்குநர் கீராவிடம் கேட்டோம்…

இது ஒரு அழகான த்ரில்லர் பேய் கதை. 3 கால கட்டங்களில் நடக்கிற கதை. கதைப்படி ஹீரோ வெற்றி எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என்று வாய்ப்பு தேடுகிறார்.

தினேஷ் நடிக்க பவர்ஸ்டார் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையின் கரு பிடித்து போவதால் ஒரு வாரத்திற்குள் முழுகதையையும் சொல்ல வேண்டும் என நடிகர் தினேஷ் கூறுவதால் கதை எழுத அறையிலேயே இருக்கிறார்.
கதை எழுத தொடங்கினால் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் அடிக்கடி வ ந்து போவதால் கவனம் சிதறுகிறது. இ ந்த அன்பு தொல்லையில் இரு ந்து தப்பிக்க குடியிருக்கும் வீட்டில் கன்னிப்பேய் இருப்பதாக ஒரு பொய் கதையை சொல்கிறார் இயக்குனர் வெற்றி.

அதோடு அ ந்த கதைய வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டி சொன்னதாகவும் பேய் உண்மையை சொல்லிவிட்டதால் எ ந்த நேரமும் தான் அ ந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லும் பாட்டி திடீரென இறந்து போக பேய் கதை கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடை ந்து அ ந்த வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.

இயக்குனர் வெற்றி பொய்யாக உருவாக்கிய பேய் கதை நிஜமானதா… கதையை எழுதி முடித்தாரா… உண்மையில் பேய் என்ற ஒன்று இருக்கிறதா… இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் மெர்லின் கதை.

தற்போது படத்தின் தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றார்.