தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்! : விஷால் வெற்றி!

Get real time updates directly on you device, subscribe now.

vishal1

ரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் தேர்தல் நடந்தது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்தார்கள். அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 335 வாக்குகளும், கேயார் 224 வாக்குகளும் பெற்றுள்ளார்கள்.

Related Posts
1 of 65

மேலும் விஷால் தலைமையிலான முன்னேற்ற அணி இந்தத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் சார்பில் அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ஜ், கெளதம்வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

விஷால் அணியில் விஷால், ஞானவேல்ராஜ், மி்ஷ்கின், கதிரேசன், எஸ்.ஆர். பிரபு, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் வெறஅறி பெற்றனர். ஞானவேல்ராஜா, மிஷ்கின் ஆகியோர் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டனர். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் துணைத் தலைவர்களாக வெற்றி பெற்றனர்.

எஸ்.ஆர். பிரபு, பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வெற்றி பெற்ற விஷாலுக்கும் மற்றவர்களுக்கும் தயாரிப்பாளர்களும், திரையுலகினர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.