‘டார்லிங் 2’ நாயகன் மிரட்டும் ‘விதி மதி உல்டா’!
ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் ‘விதி மதி உல்டா’ என்ற புதிய படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
‘டார்லிங் 2’ கதாநாயகன் ரமீஸ் ராஜா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்குகிறார்.
மனிதன் கனவின் காண்கின்ற காட்சிகளெல்லாம் நிஜமாகி நேரில் வந்தால் மனித வாழ்க்கையே விபரீதமாகி விடும். அந்த விபரீதமே விதியானால் அந்த விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியாதா?
இந்த கேள்விக்கான விளக்கம் தான் ‘விதி மதி உல்டா’ படத்தின் கதையாகும். இதை காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாக்குகிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ”தாறுமாறா ஒரு பார்வை பார்க்க நேர்மாறா” என்ன அடிச்சி தூக்க என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல் காட்சியில் ரமீஷ்ராஜா, ஜனனி ஐயர் இணைந்து ஆடிப்பாட பாண்டிச்சேரியில் படமாக்கினார்கள்.
கானாபாலா, அந்தோணிதாஸ் இணைந்து பாடிய ”நான் தாண்டா மாஸ் நீதான் என் பாஸ்” என்ற குத்துப்பாடலுக்கு ரமீஸ்ராஜா, டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ராயன் ஆகியோரை குத்தாட்டம் போட்டு ஆட வைத்து படமாக்கினார்கள்.
இந்தப் படத்திற்கான அனைத்துக் கட்ட படப்பிடிப்புகளும் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து வளர்ந்து வருகிறது.
ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வின், பாடல்கள் – கபிலன், எடிட்டிங் – புவனசுந்தர், சண்டை – சாம் ஆண்டனி, மக்கள் தொடர்பு – பெரு துளசி பழனிவேல், தயாரிப்பு – ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய் பாலாஜி