நாயகனும் இல்லை; வில்லனும் இல்லை : அதுதான் ‘ஆண்டவன் கட்டளை’!
காக்கா முட்டை, குற்றமே தண்டனை என அடுத்தடுத்த வாழ்க்கையின் யதார்த்தங்களைச் சொல்லும் படங்களைத் தரும் இயக்குநர் மணிகண்டனின் அடுத்த படம் தான் ‘ஆண்டவன் கட்டளை’.
பாடல்கள் அதிகம் இல்லாத காக்கா முட்டை, பாடல்களே இல்லாத குற்றமே தண்டனை என படங்கள் எடுத்த மணிகண்டன் முதல்முறையாக இந்தப்படத்தை கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறார்.
ஆமாம், படத்தில் மொத்தம் 9 பாடல்கள் வருமாம்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.
இருவருமே நாயகன் – நாயகியாக சொல்லப்பட்டாலும் படத்தில் வில்லனே இல்லை, என்னுடைய படங்களில் எப்போதுமே வில்லன் என்கிற கேரக்டரே இருக்காது. சூழ்நிலைகள் தான் வில்லனாக அமையும்.
அந்த வகையில் இதில் விஜய் சேதுபதியும், ரித்திகா சிங்கும் ஒரு கேரக்டராகவே படம் முழுக்க வருகிறார்கள் என்றார் மணிகண்டன்.
கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீ க்ரின் ஸ்டூடியோஸ் விநியோகம் செய்கிறது. படம் செப்டம்பர் 23 தேதி வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.