தல அஜித்தா இது..? : வாய் பிளக்க வைத்த விவேகம் மாஸ் லுக்!
அஜித் நடித்த படம் வந்து ஒரு வருடம் முழுமையாக கடந்து விட்டது.
இதனால் அவரது ரசிகர்கள் நாளுக்கு நாள் வருத்தத்தோடு இருக்கிறார்கள்.
விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என அவ்வப்போது அந்தப் படத்தைப் பற்றிய சமாச்சாரங்கள் தான் அவர்களை இன்னும் உற்சாகம் குறையாமல் வைத்திருக்கிறது.
அதிலும் விவேகம் படத்தின் கடுகு சைஸ் சமாச்சாரமாக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு அது திருவிழாவை தரிசித்த சந்தோஷம் தான்.
அந்த சந்தோஷம் நேற்றும் கிடைத்தது.
ஆமாம், அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் பல்கேரியாவில் தொடங்குகிறது. இதற்கான விவேகம் படக்குழு 10 நாட்களுக்கு முன்பாகவே அங்கு முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கச் சென்று விட, அஜித் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ப்ளைட்டைப் பிடித்து பல்கேரியா சென்றார்.
அவர் அங்கு சென்று இறங்கி ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் கிழிந்த அழுக்கு சட்டையுடன் உடல் முழுவதும் காயம் இருக்கும் வகையில் சிக்ஸ் பேக் லுக்கில் அஜித் நடித்த ஒரு காட்சியின் ஸ்டில் இணையதளத்தில் லீக் ஆகி விட்டது.
லீக் ஆனது ஒரே ஒரு ஸ்டில் என்றாலும் அஜித் ரசிகர்களுக்கு அது பொக்கிஷம் தானே? உடனே நேற்று முழுவதும் அதை உலக அளவில் ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்து அதகளம் செய்து விட்டார்கள்.
பல்கேரியாவில் நடைபெறும் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் மற்றும் ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். அதை முடித்த கையோடு படத்தின் டீஸரை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.