விஜய் 60 : சிங்கிளாக கலக்க வரும் விஜய்!
வேகம் எடுத்திருக்கும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
‘அழகிய தமிழ் மகன்’ பட இயக்குநர் பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது தான் கடந்த சில நாட்களாக மீடியாக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
டபுள் ரோல் என்றால் ரசிகர்களுக்கு சந்தோஷம் தான். ஆனால் கதைப்படி அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பரதன்.
படத்தில் விஜய் சார் சிங்கிளாகத் தான் வருகிறார். இரட்டை வேடம் எல்லாம் இல்லை.
ஆனால் அந்த சிங்கிள் கேரக்டரில் மூன்று விதமான ஒப்பனையோடு வருவார். அது அவரை திரையில் புதிதாக பார்ப்பது போல இருக்கும். அவரது ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும் என்கிறார் பரதன்.
சிங்கம் சிங்கிளாத்தானே வரும்..!