‘வால்டர்’ டைட்டிலை கைப்பற்றிய சிபிராஜ்!

Get real time updates directly on you device, subscribe now.

டிகர் சத்யராஜின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்த படம் ”வால்டர் வெற்றிவேல்”.

இப்போது அதே மாதிரியான டைட்டிலான ”வால்டர்” படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ். இருப்பினும், தலைப்பு தொடர்பாக எதிர்பாராத சர்ச்சையில் இந்த படமும் சிக்கியது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, இந்த படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் பிரபு திலக் கூறும்போது, “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்த படத்துக்கு ‘வால்டர்’ என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் எல்லாம் முடிந்து தலைப்பு எங்கள் வசமானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

Related Posts
1 of 139

தற்போது, ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் கோவில் நகரமான கும்பகோணத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் படமாக்கி வருகிறார் இயக்குனர் அன்பு. சமுத்திரகனி போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் இருப்பதால் ரசிகர்களிடையே படம் மீதான ஆவலை அதிகமாக்கி இருக்கிறது” என்றார்.

11:11 ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாராகும் இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” பட நாயகி ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒருவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.