ஹாலிவுட் தரத்தில் காவியன்
படத்தின் தலைப்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. காவியன் என்ற கவித்துவ தலைப்போடு ஒரு கனமான கதையோடும் களம் இறங்க தயாராக இருக்கிறது படக்குழு. உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத் தான். அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள் தான். இப்படி ஒரு அதிர்ச்சிகலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் காவியன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தை 2M சினிமாஸ்க்காக K.V சபரிஷ் தயாரிக்கிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சாம் நடிக்கிறார். மனம் கொத்திப் பறவை படத்தில் அறிமுகமான அத்மையா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவிகுமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய நடிகர்களும் படத்தில் பங்கேற்கிறார்கள்.
விறுவிறுப்பான இக்கதையை அழகான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் சாரதி. ஒளிப்பதிவு மூலம் படத்தில் தனிக்கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் N.S. ராஜேஷ்குமார். அதிரடி இசையை ஸ்யாம் மோகன் MM வழங்க, எடிட்டராக அருண்தாமஸ் AKD பணியாற்றியுள்ளார். ஆர்ட் டைரக்டராக T.N.கபிலனும், ஆக்ஷன் சண்டைப்பயிற்சிப் பணியை ஸ்டண்ட் சிவாவும் கவனித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்களை எழுதி இருக்கிறார். சவுண்ட் டிசைனராக M.J.ராஜு, மேக்கப்: P.S.குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி.
இந்தியத் தொழிநுட்பக் கலைஞர்களோடு ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத்துள்ள இப்படம் இம்மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. உலகெங்கும்
SDC Picturez இப்படத்தை வெளியீடுகிறது