அன்புச் செழியனுக்கு ‘உத்தமர்’ சான்றிதழ் கொடுத்த சீனு ராமசாமி – அப்போ ஏன் சார் ‘இடம் பொருள் ஏவல்’ ரிலீசாகல?

Get real time updates directly on you device, subscribe now.

seenu ramasamyயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் ”மதுரையைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வட்டி போட்டு நெருக்கடி கொடுத்ததால் இப்படி ஒரு முடிவை எடுக்க நேர்ந்ததாகவும்” தெரிவித்திருந்தார்.

தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தற்கொலை விவாகரத்தில் பலரும் அன்புச் செழியனின் இந்த ஈவு இரக்கமற்ற செயலை கண்டித்து கருத்துகளும், அறிக்கைகளும் விட்டபடி இருக்கிறார்கள்.

‘நான் கடவுள்’ சமயத்தில் நடிகர் அஜித்தையே மிரட்டியவர் தான் இந்த அன்புச் செழியன் என்றும், மத்திய வருவாய்த்துறை இவருடைய வீட்டுக்குச் சென்றால் ஏகப்பட்ட பணத்தை அள்ளலாம் என்றும் காட்டமாகவே அறிக்கை விட்டிருந்தார் டைரக்டர் சுசீந்திரன்.

இந்நிலையில் அன்புச் செழியன் உத்தமர் என்று அவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

”எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாகச் சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே.” என்று தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

அவருடைய இந்த கருத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்த நிலையில் திடீரென்று அந்தக் கருத்தை நீக்கியிருக்கிறார். தங்களுடைய படங்களில் மட்டும் சாதி, மதமற்ற சமத்துவ கருத்துகளைச் சொல்லும் சீனு ராமசாமி போன்ற இயக்குனர்கள் நிஜ வாழ்க்கையில் வெறோரு முகத்தோடு இருப்பதையே இது காட்டுகிறது.

இதற்கும் சீனு ராமசாமி இயக்கத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படம் ரிலீசாகாமல் இருப்பதற்கே இதே அன்புச் செழியன் அப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு கொடுத்த டார்ச்சர்கள் தான் முக்கிய காரணம் என்கிற விஷயம் சீனு ராமசாமிக்கு நன்றாகத் தெரியும்.

அப்படியிருந்தும் சீனு ராமசாமி ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு காரணம் என்ன என்று திரைத்துறையில் விசாரித்தால் அவருடைய ‘சாதிப்பாசம்’ தான் முக்கியமான காரணம் என்கிறார்கள்.

அதேபோல இறந்து போன அஷோக் குமார் மரணத்துக்கு காரணமான ஃபைனான்சியர் அன்புசெழியன் மீது, சசிகுமார் புகார் அளிக்க தயாரான போது, அவர் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று இயக்குநர் பாலா நீண்ட நேரம் பஞ்சாயத்து செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எரிச்சலான இயக்குனர் அமீர் வட்டி கட்டும்போது வந்து பேசாமல், எழவு வீட்டில் வந்து பஞ்சாயத்து செய்கிறீர்களா என்று கூறிய பிறகு வார்த்தை முற்றி, பாலா கோபமாக வெளியேறியுள்ளார்.
அதற்கு பிறகே சசிகுமார் புகார் அளித்துள்ளார்.

அண்மைக்காலமாக சினிமாவிலும் தொடர்ந்து அதிகரிக்கும் சாதி சார்ந்த நிலைகள் தான் இப்படி எல்லோருக்கும் பொதுவாக வரும் பல பிரச்னைகளை எந்த தீர்வும் இல்லாமல் நீர்த்துப் போகச் செய்கின்றன என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.