பிரியாணி விருந்து, செல்ஃபி – ரசிகர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்?

Get real time updates directly on you device, subscribe now.

மல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் என தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அடுத்தடுத்து அரசியலுக்கு வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார். அவர்கள் கடந்த சில மாதங்க ளாகவே தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

இப்படி விஜய் மட்டுமில்லாமல் அவருடைய ரசிகர்களின் செயல்பாடுகளும் சமூகம் சார்ந்து நகர்வதால் விஜய் அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகிறாரோ என்று சந்தேகப்பார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

Related Posts
1 of 88

சில நாட்களுக்கு முன்பு கூட சென்னை அருகே உள்ள பனையூரில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தனது ரசிகர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய். அப்போது வந்திருந்த ரசிகர்கள் எல்லோருடனும் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்தும் வைத்து சந்தோஷப்பட்டிருக்கிறார் விஜய்.

இது வழக்கமான சந்திப்பு தான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அண்மைக்காலமாக தமிழ்சினிமா முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டிருப்பதால் அதற்கு விஜய்யும் தப்பவில்லை அதனால் தான் தனது ரசிகர்கள் மீது அதீத அன்பு செலுத்த ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வர இருக்கும் மூன்றாவது படம் இது. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.