‘ஃபேவரைட் டைரக்டர்’ லிஸ்ட்ல சிவா பெயரா? – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அவார்ட்ஸ்!
எந்த தமிழ்ப்படங்களையும் வாங்க மாட்டேன். ஆனால் ஆண்டு தோறும் தமிழ் நடிகர், நடிகைகளை வைத்து விருது விழாவை நடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தது விஜய் டிவி.
இதில் விஜய், அஜீத், கமல்ஹாசன், சூர்யா என முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆண்டுதோறும் ஏதாவது பெயரில் விருதை வழங்கி சின்னத்திரை ரசிகர்களின் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகி அசிங்கப்படவும் தவறவில்லை.
இதனாலேயே விஜய் டிவி விருது மீது இருந்த நம்பகத்தன்மை கடந்த சில ஆண்டுகளாக மீம்ஸ் போட்டு கலாய்க்கிற அளவுக்கு மாறிப்போனது. அதோடு புதுப் படங்களை வாங்காமல் விழாவை மட்டும் நடத்து கோடிகளை சம்பாதிக்கும் விஜய் டிவியின் சுயநலத்தை புரிந்து கொண்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இனிமேல் எந்த நடிகர், நடிகைகளும் விஜய் விருது விழாவுக்கு வர மாட்டார்கள் என தடை போட்டது.
இதனால் பிரம்மாண்டமாக நடைபெறும் விஜய் அவார்ட்ஸ் விழா கடந்த இரண்டு வருடங்களாக நடக்கவில்லை. தற்போது இந்த ஆண்டு மீண்டும் விருது விழாவை நடத்த திட்டமிட்ட விஜய் டிவி ‘காலா’, ‘காளி’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருக்கிறது.
விருது விழா ஆரம்பிப்பதற்காக வேலைகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், வழக்கம் போல அதுபற்றிய சர்ச்சைகளும் உலா வர தொடங்கிவிட்டது.
ஆமாம், உங்களுடைய ‘ஃபேவரைட் டைரக்டர்’ யார்? என்பிரிவில் இயக்குனர் சிவாவை நாமினி செய்துள்ளனர்.
ஆனால், கடந்த வருடம் சிவாவின் டைரக்ஷனில் வெளியான ‘விவேகம்’ படம் படு தோல்வியை தான் சந்தித்தது. சொல்லப்போனால் அந்தப்படம் அஜீத் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
அப்படியிருக்கும் போது அவரைப் போய் எப்படி விஜய் டிவி ‘ஃபேவரட் இயக்குனர்’ பிரிவில் சேர்த்தது? என்று கேள்வி எழுப்பி சர்ச்சை வெடித்துள்ளது.
சர்ச்சை இல்லாம ஒரு விழாவையும் நடத்த மாட்டீங்களாய்யா?