யாத்திசை- விமர்சனம்

சிறு ஒளி பெரும் சிற்பத்தை செதுக்குவதற்கு பின்னால் எவ்வளவு பெரிய உழைப்பு இருக்கிறதோ அதே அளவினால உழைப்பால் மிரள வைத்திருக்கிறார்கள் யாத்திசை படக்குழுவினர்! அது சரி படம் நம்மை எமோஷ்னலாக நம்மை மிரள வைத்ததா?
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் ரணதீரன் மீது படையெடுக்கிறது கொதி தலமையிலான எயினர் படை. இரு படைகளுக்கான போரின் பின்னணி என்ன? போரில் யார் வென்றார் என்பதே படத்தின் கதை
ரணதீர பாண்டியனாக நடித்துள்ள ஷக்தி மித்ரன் தன் சக்தியை முழுவதும் கொடுத்து நன்றாக நடித்துள்ளார். எயினர் படைத்தலைவன் கொதியாக நடித்துள்ள சேயோன் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். குரு சோமசுந்தரம், ராஜலட்சுமி, சுபத்ரா உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற அத்தனை நடிகர்கள் தனித்துவமான நடிப்பால் கவனம் குவிக்கிறார்கள்
அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவை தனிப்பதிவாக கவனிக்க வைத்துள்ளார். சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே ரகம். கலை இயக்குநர் இரஞ்சித் குமார் அபாரமான உழைப்பைக் கொடுத்துள்ளார். ஆயுதங்கள் உள்பட அக்கால பொருட்கள் எல்லாம் ஆச்சர்யம். சி.ஜி டீம் வொர்க்கும் தவறாக தெரியவில்லை. வெ.சுரேஷ்குமார் உடை வடிவமைப்பை மிக நேர்த்தியாகச் செய்துள்ளார்.
தரமான மேக்கிங் மற்றும் திட்டமிடலில் பட டீம் எடுத்துக்கொண்டுள்ள கவனம் ஆச்சர்யப்படுத்துகிறது. இந்தப்படத்தை நாம் பார்த்தே ஆக வேண்டும் என்ற டிமாண்டை ஏற்படுத்தாதது படத்தின் பெருங்குறை. சோழர்கள் பாண்டியர்களுக்கான போரில் சிறுகுடிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டன டீடைல்ஸில் செலுத்திய கவனத்தை திரைக்கதையில் செலுத்தியிருந்தால் நிச்சயமாக யாத்திசையை கொண்டாடி இருக்கலாம்.
#யாத்திசை #yaathisai
3/5