விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை நோட்டம் விட்ட லைகா புரொடக்‌ஷன்ஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

vijay-antony

விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘நான்’ படத்தை தொடர்ந்து, அதே கூட்டணி இப்போது மீண்டும்’ எமன்’ புதிய படம் மூலம் இணைகின்றனர்.

தங்களுக்கென்று திரையுலகில் தனி இடத்தை நிர்மாணித்துக் கொண்ட லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளனர்.

‘எமன் ‘படத்தின் துவக்க விழா நேற்று முன்தினம் பிப்ரவரி 6- தேதி லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

Related Posts
1 of 19

லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜுமகாலிங்கம் ‘எமன்” படத்தின் கதையை பற்றி கூறும் போது : விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை நாங்கள் எங்களது நிறுவனத்தின் சார்பில் கூர்ந்துக் கவனித்து வருகிறோம்.

இந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பு எங்களிடம் வந்தப் போது நாங்கள் சற்றும் தயங்கவில்லை. ஏனென்றால் விஜய் ஆண்டனி – ஜீவாஷங்கர் ஏற்கனவே தங்களை நிரூபித்த கூட்டணி.

‘எமன்’ என்ற தலைப்பு மிகவும் வித்தியாசமான தலைப்பு தான். கதையை கேட்ட நொடியே இந்த தலைப்பு தான் கதைக்கு ஏற்றத் தலைப்பு என்பதை உணர்ந்து கொண்டேன். எமன் ஒரு சிவ பக்தர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு சுவராசியமான சம்பவம் என்னவென்றால் இந்தப் படத்தை பொறுப்பு என்னிடம் பகிர்ந்து கொள்ளபட்ட போது நான் ஒரு சிவன் கோவிலில் தான் இருந்தேன்.

‘எமன்’ படப்பிடிப்பு இன்று 10-ஆம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.