வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” !
தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.விரைவில் படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெயலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புகுழு தெரிவித்துள்ளது.