ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளமா? – கடுப்பான யோகிபாபு

Get real time updates directly on you device, subscribe now.

ந்தானத்துக்குப் பிறகு தமிழ்சினிமாவில் காமெடியன்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

மனசு விட்டு சிரிக்கிற மாதிரி இல்லை என்றாலும், பரவாயில்லை ரகமாகத்தான் இருக்கிறது யோகிபாபுவின் காமெடி.

ஆனால் அதற்காக ஒருநாளைக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்பதெல்லாம் டூ-மச் அல்லவா? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த சந்தேகத்தை தர்ம பிரபு இசை வெளியீட்டு விழாவில் கேட்டார்.

Related Posts
1 of 14

யோகிபாபு சார் நீங்க ஒருநாளைக்கு 10 லட்சம், 15 லட்சம் சம்பளம் வாங்குறதா கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க. அதை கொஞ்சம் விளக்கிடுங்க என்றார்.

அதற்கு பதிலளிக்க வந்த யோகிபாபு கொஞ்சம் கடுப்பாகவே பேசினார்… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் இங்கு, என்னுடைய ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், 15 லட்சம் என்று பேசினார். நான் வருமான வரியே இன்னும் 20 லட்சம் கட்டாமல் இருக்கிறேன்.

இன்னும் பல தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பணம் வரவில்லை, ஒவ்வொருவரிடமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு 10 லட்சம், 15 லட்சம் சம்பளம் எல்லாம் கேட்கவில்லை. 2000 ரூபாய், 3000 ரூபாய் சம்பளத்துக்கு வந்தவன் நான். தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவன். வெளியில் நான் அப்படி வாங்குவதாகச் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.