‘ஜேம்ஸ் பாண்ட்’ விளம்பரத்துக்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா!

Get real time updates directly on you device, subscribe now.

yuvan

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில், சில தனித்துவமான காணொளிகள் வைரலாக பரவுவதை நாம் பார்த்து இருக்கிறோம்…. ஆனால் தற்போது முதல் முறையாக ‘பான் பஹார்’ என்னும் ஒரு விளம்பர படம். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது.

அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று, ஹாலிவுட் ‘ஜேம்ஸ் பாண்ட்’ புகழ் பியர்ஸ் பிராஸ்னன் இந்த விளம்பர படத்தில் நடித்திருப்பது. மற்றொன்று, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த விளம்பர படத்திற்கு இசையமைத்திருப்பது.

அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பர படத்தின் பின்ணணி இசைக்காக யுவன்ஷங்கர் ராஜா உபயோகப்படுத்தி இருக்கும் ‘வயோலா’ ரக இசைக்கருவியும், ‘கியூபா’ நாட்டின் பிரசித்தி பெற்ற ‘மாம்போ’ தாளங்களும், ரசிகர்களுக்கு ஒரு ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்முறையாக பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனிற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பது அவரது இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.