யாருமே நடிக்காத கதாபாத்திரம் தான் காஸ்மோரா! : கார்த்தி பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

kashmora

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காஷ்மோரா.
இப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். காஷ்மோரா தீபாவளி வெளியிடாக திரைக்கு வருகிறது.

வழக்கமான கார்த்தி படமாக இல்லாமல் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது இந்தப்படம்.

Related Posts
1 of 36

படத்தில் வரும் காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது. இந்த கதாபாத்திரத்தை உருவாக்க இயக்குநர் கோகுல் அதிக காலம் எடுத்து கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்து இப்பாத்திரத்தை படைத்துள்ளார்.

ஏனென்றால் இப்பாத்திரம் மிகவும் புதுமையானது, தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கையிலெடுக்காத ஒரு கதாபாத்திரம். ஆம், காஷ்மோரா என்பவன் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் ஆழமாக சொல்லாத, தொடாத பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை செய்யும் பிளாக் மேஜிசியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்பாத்திரம் ராஜ் நாயக் பாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபாடும். நிச்சயம் இதை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசிப்பார்கள் என்று பெருமிதத்தோடு சொன்னார் கார்த்தி.