தக்ஸ்- விமர்சனம்

சிறைச்சாலையை மையப்படுத்தி வரும் படமென்றால் அப்படத்தில் ஒரு எமோஷ்னல் அதிர்வு இருக்கும். தக்ஸில் அது இருக்கிறதா?
ஆதரவற்ற இல்லத்தில் வளரும் நாயகி அனஸ்வராவிடம் தன் உள்ளத்தை கொடுக்கிறார் நாயகன் ஹிருது ஹாரூன். அனஸ்வராவிற்கு ஒரு ரவுடி தொல்லை கொடுக்க, ஆல்ரெடி தாதாவிடம் வேலை செய்யும் ஹீரோவிற்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் கொலை வரை கொண்டு செல்கிறது. கொலை சிறைக்கு அழைத்துச் செல்ல, சிறையில் இருந்து சிலரோடு தப்பிக்க முயற்சிக்கிறார் ஹீரோ? அந்த முயற்சி என்னானது? என்பதே கதை
ஹிருது ஹாரூன் முதல்படத்திலே தன்னை நல்ல நடிகராக அடையாளப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் நல்ல கவனம் பெறுகிறார். பாபிசிம்ஹா சிறைத்தோழனாக வந்து கவர்கிறார். முனிஷ்காந்த், ஆர்.கே சுரேஷ், பி.எல் தேனப்பன் ஆகியோர் கேரக்டர்களுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். ஹீரோயின் அனஸ்வரா போதிய கவனமில்லாமல் வந்து போகிறார்
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் தானொரு டான் என மீண்டும் நிரூபித்துள்ளார். காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை இசையாலே கொண்டு வந்துள்ளார். ஒளிப்பதிவில் பிரியேஸ் குருசாமி தன் முத்திரையைப் பதித்துள்ளார்
தாதா, காதல், சிறை என நல்ல லைனை கையில் எடுத்துள்ளார் இயக்குநர் பிருந்தா. நிறைய காட்சிகளில் நல்ல உழைப்பைக் கொடுத்து மேக்கிங் செய்துள்ளார்.
கதையாக்கத்தில் செலுத்திய கவனத்தை திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் தக்ஸுக்கு தம்ஸப் காட்டியிருக்கலாம்
2.75/5