மின்னும் ஓர் இரவு படத்தின் கதை என்ன?

Get real time updates directly on you device, subscribe now.

நிறைய படங்களில் நடித்து கவனம் ஈர்த்த இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ படத்தில் அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதே கதை,” என்றார்.

நடிகர் இனிகோ பிரபாகர் உடன் பணியாற்றியது குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “படம் தொடங்கிய போது அந்நியர்களாக பழகத் தொடங்கிய நாங்கள் படம் முடியும் போது நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இனிகோ பிரபாகர், ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் உருவாக்கம் மற்றும் வெளியிட்டிலும் மிகவும் ஆதரவாக இருந்தார்,” என்று கூறினார்.

‘மின்னும் ஓர் இரவு’ நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Watch the trailer now: https://youtu.be/wL3v1rvh1z4

#MinnumOarIravu