8 கோடியை எடுத்து வையுங்க… : தயாரிப்பாளர்களை கலங்கடிக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

Get real time updates directly on you device, subscribe now.

KARTHIK-SUBBURAJ

குறும்படம் என்றாலே முகத்தை சுளிக்கும் தயாரிப்பாளர்களை இன்றைக்கு அதே குறும்பட உலகில் புதிதாக வருபவர்களை தேடிப்பிடித்து போகிற அளவுக்கு கொண்டு வந்து விட்டவர் கார்த்திக் சுப்புராஜ்.

பீட்சா, ஜிகர்தண்டா என அடுத்தடுத்து இயக்கிய இரண்டு படங்கள் மெகா ஹிட்டானாலும் இரண்டாவது படத்திலேயே தயாரிப்பாளருடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டதால் புதுப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்த்தது.

முதல் பட தயாரிப்பாளரே மூன்றாவதாக ‘இறைவி’ பட வாய்ப்பையும் கொடுத்திருக்கின்ற நிலையில் எந்த இடத்திலும் தனது கெத்தை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

Related Posts
1 of 7

யாராவது தயாரிப்பாளர் அவரைத் தேடி வந்து படம் இயக்கக் கேட்டால் அவருக்கு மட்டுமே 8 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள் சக தயாரிப்பாளர்களிடம் இந்த விஷயத்தை கசிய விட ‘இறைவி’யை முடித்த பிறகும் வெளி தயாரிப்பாளர்கள் யாருமே கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்துக்கு கிடைக்கவில்லை.

இப்போது தனது சொந்தக் கம்பெனியிலேயே சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.