“பாம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

Get real time updates directly on you device, subscribe now.

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது. எஸ் ஆர் எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவினில்இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது,
இதே கல்லூரியில் நானும் சுற்றிக் கொண்டிருந்தேன் இப்போது உங்கள் முன்னால் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சி. பாம் ஒரு சுவாரஸ்யமான படமாக இருக்கும், ஃபன் எண்டர்டெயின்மெண்டாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைத்திற்கும் டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி, இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார், அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா உங்களுக்கும் நன்றி. GEMBRIO நிறுவனத்திற்கு என் நன்றிகள். எங்கள் இளம் குழுவிற்கு ஆதரவைத் தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

Related Posts
1 of 2,109

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது..
பாம் மிக ஸ்பெஷலான படம், கதை கேட்டவுடன் எனக்குப் பிடித்தது. இமான் சார் இப்படத்தில் ஒப்புக்கொண்டு இசையமைத்தது மகிழ்ச்சி. அவர் தான் நான் சரியாக இருப்பேன் எனறு கூறியுள்ளார். ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள். GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், இன்னும் நிறைய நல்ல படம் செய்ய வாழ்த்துக்கள். இந்தப்படம் மிக ஜாலியான படமாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.