‘ராதே ஷியாம்’ குழுவினரின் காதல் ததும்பும் புதிய போஸ்டர்

Get real time updates directly on you device, subscribe now.

‘ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை கருதியும் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த காதல் கதையின் புதிய போஸ்டரில், இருவரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு தரையில் படுத்துள்ளனர். பின்னணியில் பனி படர்ந்துள்ளது. காதல் மற்றும் கனவுலகங்களின் கலவையாக இது அமைந்துள்ளது.

படத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக போஸ்டர் உள்ளது. இத்தாலியில் உள்ள ரோம் உள்ளிட்ட மிகவும் அழகான இடங்களில் ‘ராதே ஷியாம்’ படமாக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

Related Posts
1 of 2,415

அதிரடி காதல் படமான ‘ராதே ஷியாம்’-ல், பத்து வருடங்களுக்கு பிறகு காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது வரை ரசிகர்கள் கண்டிராத ஒரு திரைப்படமாய் இது அமையும்.

ஜூலை 30, 2021 அன்று வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக, அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்துள்ள பிராபஸ் மற்றும் அழகு மிளிரும் நடிகையான பூஜா ஹெக்டேவை திரையில் காண மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அவர்கள் உள்ளனர்.

பன்மொழிப் படமான ‘ராதே ஷியாம்’, ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் இதை தயாரித்துள்ளனர்.