ஆர்யா வெளியிட்ட ‘உறுமீன்’ Prediction கேம்

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் உறுமீன். சக்திவேல் பெருமாள் சாமி இயக்கியிருக்கும் இப்படத்தை டி.டில்லிபாபு தயாரித்திருக்கிறார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்யும் இப்படத்தின் பாபி சிம்ஹாவுடன் ரேஷ்மிமேனன், கலையரசன் நடித்திருக்கும் இப்படத்தின் prediction கேமை சமீபத்தில் வெளியிட்டார் நடிகர் ஆர்யா.
இந்த நிகழ்ச்சியில் உறுமின் படக்குழுவினர் , இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி, கதாநாயகன் பாபிசிம்ஹா, இசையமைப்பாளர் அச்சு, நாயகி ரேஸ்மி மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கேமில் உள்ள ஸ்பெஷல் என்ன தெரியுமா?
உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்? அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள்? என்று கணித்துச் சொல்லுமாம்.
நீங்களும் விளையாட www.urumeenpredictions.com என்கிற லிங்க்கை கிளிக் செய்யவும்.