அப்பா வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முக பாண்டியன்!
நடிகர் விஜயகாந்தின் கலை வாரிசான சண்முக பாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்.
‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சண்முக பாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரை வீரன் திரைப்படத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தே.மு.தி.க கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.
இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான 2018 ஏப்ரல் 6-ஆம் தேதியான இன்று காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.
திரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.