ஒரே வாரத்தில் 500 கோடியை வசூல் செய்த ‘2.0’ !

Get real time updates directly on you device, subscribe now.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் சென்ற வாரம் ரிலீசான படம் ‘2.0’.

சுமார் 600 கோடி ரூபாய் செலவில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

ரிலீசான முதல் 2 நாட்களில் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தாலும், 3டி தியேட்டர்களைத் தவிர மற்ற தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல் காற்று வாங்குகிறது. சென்னை உள்ளிட்ட ஹை-டெக் சிட்டிகளில் மட்டும் வார விடுமுறை நாட்களில் ரசிகர்கள் இப்படத்தை விரும்பிப் பார்த்தனர்.

Related Posts
1 of 71

இதனால் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 500 கோடி ரூபாயை வசூல்செய்திருப்பதாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த வசூல் தகவலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினாலும் படத்துக்கு செலவான தொகையான 600 கோடியை எடுப்பதற்கு இந்த 500 கோடி பத்தாது.

இன்னும் கூடுதலாக 500 கோடியை வசூல் செய்ய வேண்டும். அதாவது மொத்தமாக 1000 கோடி ரூபாயை வசூல் செய்தால் தான் செலவு செய்த 600 கோடியை லைகா நிறுவனம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.