2015ன் – கலெக்‌ஷன் ஹீரோக்கள்! : அஜித்துக்கு முதலிடம்! விஜய்க்கு ஐந்தாவது இடம்!!!

Get real time updates directly on you device, subscribe now.

ajith1

ந்த வசூல் ரிப்போர்ட்டைப் படித்து முடித்ததும் உண்மையிலேயே இதை நம்பலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் உங்களுக்கு நிச்சயமாக ஏற்படும்.

அதிலும் அஜித் – விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இந்த புள்ளி விபரத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

படம் சுமார் தான் என்று சொல்லப்பட்ட அஜித்தின் ”வேதாளம்” வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அவரது போட்டியாளரான விஜய்யின் ”புலி” ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

”அந்தப்படம் சரியாப் போகல…” என்று தனுஷே ஒப்புக்கொண்ட ”மாரி” படம் கூட முதல் பத்து இடத்துக்குள் வந்திருக்கிறது.

Related Posts
1 of 174

ஆனால் இதுதான் 2015- ஆம் ஆண்டின் உண்மையான வசூல் நிலவரம் என்கிறார் தமிழ்நாடு திரையரங்குகள் வசூல் தொடர்பான புள்ளி விபரங்களை பல ஆண்டுகளாக கேட்டும், கணித்தும் சொல்லி வரும் ஆர்.ராமானுஜம்.

2015ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் வசூல் அடிப்படையில் முதல் 30 இடங்களைப் பெற்ற படங்களின் பட்டியல்…

தமிழ்நாடு தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் வசூலின் மூலம் செலவு போக, வினியோகஸ்தர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ கிடைத்த நிகர வருமானத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர்!

வேதாளம் – 60 கோடி
ஐ – 45 கோடி
காஞ்சனா 2 – 40 கோடி
பாகுபலி – 38 கோடி
புலி – 29 கோடி
தனி ஒருவன் – 28 கோடி
என்னை அறிந்தால் – 17 கோடி
மாரி – 17 கோடி
கொம்பன் – 16 கோடி
காக்கிச்சட்டை – 15 கோடி
பாபநாசம் – 14 கோடி
தங்கமகன் – 13 கோடி
ரோமியோ ஜீலியட் – 11.50 கோடி
நானும் ரௌடிதான் – 11.50 கோடி
ஆம்பள – 11.50 கோடி
உத்தமவில்லன் – 8.50 கோடி
தரிஷா இல்லனா நயன்தாரா – 8 கோடி
வாலு – 8 கோடி
36 வயதினிலே – 7.50 கோடி
தூங்காவனம் – 7.50 கோடி
ஈட்டி – 7 கோடி
மாயா – 6.50 கோடி
ஓகே கண்மணி – 6.50 கோடி
பாயும்புலி – 6 கோடி
புறம்போக்கு என்கிற பொதுவுடமை – 5 கோடி
டிமாண்டிகாலனி – 4.50 கோடி
சண்டி வீரன் – 2.50 கோடி
டார்லிங் – 3 கோடி
மாசு – 5 கோடி
சகலகலா வல்லவன் – 2.50 கோடி