ஐயப்பனும் கோஷியும் ரீமேக்கில் தனுஷ்?
மலையாளத்தில் பீஜு மேனன் , பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி வணிகம் மற்றும் விமர்சனங்கள் என இரண்டு தளங்களிலும் வெற்றி பெற்ற திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இதில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கும், ஓய்வு பெற இருக்கும் காவல்துறை அதிகாரிக்குமான ஈகோ எந்தளவிற்கு உச்சத்திற்கு செல்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இப்படத்தின் வெற்றி இதன் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியது. கடும் போட்டிக்கு இடையில் தமிழ் ரீமேக் உரிமையை ‘ஆடுகளம்’ படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கைப்பற்றியுள்ளார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி வேடத்தில் ப்ருதிவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர் நினைக்கிறாராம்.”