நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Get real time updates directly on you device, subscribe now.

‘3 BHK’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இதன் டீசரும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts
1 of 7

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தெரிவித்திருப்பதாவது, “மனதை வருடும் இதமான, திருப்தியான கதைகளைத் தயாரிப்பது தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்த அனுபவத்தைக் கொடுத்த ‘3 BHK’ படத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. நாங்கள் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்போம். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை மகிழ்விக்கும்” என்றார்.