எமகாதகி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சிறிய பட்ஜெட்;நல்ல சப்ஜெக்ட்

படத்தின் துவக்கத்திலே ஹீரோயின் ரூபா கொடுவாயூர் இறந்துவிடுகிறார். அவரது சடலத்தை எடுப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன. ஆனால் அவரது சடலத்தை எடுக்க முடியவில்லை. ஹீரோயின் சடலத்தோடு ஊரும் உறவும் போராடுவதே இப்படத்தின் கதை

பிணமாக நடித்து தன் கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் ரூபா கொடுவாயூர்.. நல்ல நடிப்பு அவரது நடிப்பு. அம்மாவாக வரும் கீதா கைலாசம் மிரட்டியுள்ளார். க்ளைமாக்ஸில் அவர் காட்டியிருப்பது வேறலெவல் பெர்ஃபாமன்ஸ். ஏனைய நடிகர்களில் நிறையபேர் புதுமுகங்கள். நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.வெல்டன்!

சிறிய படம் என்பதால் கேமராமேனுக்கு பெரிய பெரிய சவால்கள் இருந்தாலும், அவற்றை அழகாகச் சமாளித்து நல்ல விஷுவலை கொடுத்துள்ளார். படத்திற்கு தேவையான இசையை வழங்கி சிறப்பித்துள்ளார் இசைஞர்

வளமான சிந்தனையோடு வலிமையான அட்டம்ப்டு செய்துள்ளார் இயக்குநர். நிச்சயமாக இது பாராட்டத்தக்க முயற்சி. கதைக்கு மட்டுமே முக்கியம் கொடுத்து படத்தைக் கொடுத்துள்ளனர். தியேட்டரில் நாம் கொடுக்கும் டிக்கெட் காசுக்கு சப்ஜெக்ட் வைஸ் நியாயம் செய்கிறாள் இந்த எமகாதகி
3.25/5