உன் சங்காத்தமே வேணாம் சாமி : AAA டைரக்டருக்கு ‘ரெட்’ கார்டு போட்ட சிம்பு

Get real time updates directly on you device, subscribe now.

simbu

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தந்த ரிசல்ட் சிம்புவை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது.

அவருடைய ரசிகர்கள் கூட வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ”என்ன தலைவா இப்படி ஏமாத்திப்புட்டியே…” என்று கோபத்தோடு கேட்கிற அளவுக்கு பெயரை டேமேஜ் ஆக்கி விட்டார் அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதனால் சம்பாதித்து வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டுமே என்கிற பரபரப்பில் மற்ற இயக்குநர்களை நம்பாமல் தனது அடுத்த படத்தை தானே ஆரம்பித்திருக்கிறார் சிம்பு.

Related Posts
1 of 34

சில தினங்களுக்கு முன்பிலிருந்து கமல் மொழியில் தனது ட்விட்டரில் அடுத்தப் படக்குறிப்புகளை ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகிறார்.

தனது அடுத்த படத்தில் பாடல்கள், இடைவேளை இரண்டுமே கிடையாது என்று அதிர்ச்சி கொடுத்த சிம்பு படத்தை அவரே இயக்குகிறார், இசைக்கு யுவனையும், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ்சிவனையும் கமிட் செய்திருப்பவர் ஹீரோயின் மட்டும் யார் என்பதை விரைவில் அறிவிப்பாராம்.

இதற்கிடையே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தோல்வியை சரி செய்கிற விதத்தில் ஒரு கதை என்னிடம் இருக்கிறது. மீண்டும் ஒரு படத்தை சேர்ந்து செய்யலாம் என்று கதை சொல்ல நேரம் கேட்டுக் கொண்டே இருக்கிறாராம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவோ ”நான் ரொம்ப பிஸி அப்புறம் பார்க்கலாம்” என்று அவரை புறக்கணித்து வருகிறார். அதோடு ”யார் வந்தாலும் வீட்டுக்குள்ள விடுங்க, அந்த ஆள் மட்டும் வந்தால் விட்றவே விட்றாதீங்க…” என்று தன் வீட்டு செக்யூரிட்டியிடம் சொல்லி ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ‘ரெட்’ போட்டுருக்கிறாராம்.

பின்னே அடி வாங்குனவனுக்குத்தானே அதோட வலி தெரியும்?