தொழிலதிபர் மாப்பிள்ளை ரெடி! : சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் ‘சொப்பன சுந்தரி’

Get real time updates directly on you device, subscribe now.

manisha1

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ்.

தொடர்ந்து ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ என சில தமிழ்ப்படங்களில் நடித்தவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான ‘சென்னை 600028 பார்ட் 2’ படத்தில் ”சொப்பன சுந்தரி” பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

Related Posts
1 of 2

அந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானதைத் தொடர்ந்து மீண்டும் அவரைத் தேடி புதுப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ள நிலையில் அப்படி வருகிற புதுப்பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் மனிஷா யாதவ்.

ஆமாம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வரும் மனிஷா யாதவ் அவரை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று மாப்பிள்ளை வீட்டால் கண்டிஷன் போட்டதால் இப்போதிருந்தே தன்னைத் தேடி வருகின்ற படங்களை கமிட் செய்வதை தவிர்த்து வருகிறார்.

இப்பத்தான் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது, அதுக்குள்ள இப்படியா?