ஆரோமலே- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

காதலும் கடந்து போகும்.. But மறந்து போகுமா?

ஹீரோ கிஷன் தாஸுக்கு மூன்று பருவங்களில் வெவ்வேறு பெண்ணுடன் காதல் வருகிறது. அதில் முதல் இருபருவ காதல்கள் சொதப்பி விடுகிறது. மூன்றாம் பருவ காதல் அவருக்கு சொதப்பியதா..தப்பியதா? என்பதே படத்தின் கதை. ஆக இது ஜென்ஸி ஜெனரேசனின் காதல் கதை என்பது முடிவாகிறது

நாயகனாக கிஷன் தாஸ் கொடுக்கப்பட்டுள்ள வேடத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளார். ஷிவாத்மிகா ஆகச் சிறப்பாக நடித்துள்ளார். அவரது காட்சிகள் நன்றாக வொர்க் ஆகியுள்ளது. ஹர்ஷத்கான் சிறப்பான தேர்வு. தான் ஏற்ற கேரக்டருக்கு 100% நியாயம் சேர்த்துள்ளார். வி.டி.வி கணேஷ் சிறப்பாக ஸ்கோர் செய்கிறார்.

சித்துகுமார் இசையில் இன்னும் சில சித்துவேலைகளைக் காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கலாம். ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். எடிட்டர் ஆர்ட் டைரக்டர் ஆகியோர் தத்தம் தங்கள் வேலைகளில் ஜொலித்துள்ளனர்

இயக்குநர் சாரங் தியாகு யெங்க்ஸ்டர்ஸை மட்டுமே குறிவைத்து கதையை எழுதியுள்ளார். இன்ட்ரெஸ்டிங்கான திரைக்கதை அமைப்பிலும் ஒகே தான். ஆனால் கனெக்டிங் பாயிண்டில் இன்னும் கவனம் சேர்த்திருக்க வேண்டும். இளைஞர்களுக்கு நிச்சயமாக ஒன்டைம் வாட்சபள் மூவி தான் இந்த ஆரோமலே
2.75/5