அதர்ஸ்- விமர்சனம்

பேச வேண்டிய கதையை சரியான சினிமாவாக பேசியிருக்கிறதா அதர்ஸ்?
ஒரு வேன் விபத்து நடக்கிறது. அந்த விபத்தின் பின்னணி என்ன என்பதை ஹீரோவான ஆதித்ய மாதவன் விசாரிக்கிறார். இன்னொரு புறம் ஹீரோயின் கெளரி கிஷன், தான் பணியாற்றும் ஆஸ்பிடலில் நடக்கும் ஒரு குற்றத்தைக் கண்டு குரல் எழுப்புகிறார். இரு பிரச்சனைகளும் ஒரு புள்ளியில் இணைந்து என்ன முடிவை எட்டியது என்பதே படத்தின் மீதிக்கதை
போலீஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் ஹீரோ ஆதித்ய மாதவன். எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் இன்னும் அவர் கவனம் செலுத்த வேண்டும். நாயகி கெளரி கிஷன் நன்றாக நடித்துள்ளார். அவருக்கான வெளியும் திரையில் அதிகமாக உள்ளது. அஞ்சுகுரியன் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நண்டு ஜெகன் கேரக்டரும் நடிப்பும் நச் ரகம். முனிஷ்காந்த் காமெடி செய்ய முயற்சி மட்டுமே செய்துள்ளார். மூர் தான் க்ளைமாக்ஸ் ஏரியாவில் நடிப்பில் கொடி கட்டியுள்ளார்.
ஜிப்ரான் தரமான பின்னணி இசையை வழங்கியுள்ளார். அரவிந்த் சிங் சினிமாட்டோகிராபியில் நல்ல கவனம் எடுத்து உழைத்துள்ளார் என்பது காட்சிகளில் தெரிகிறது
கதையின் முக்கியக் கூறு மிகவும் புதிது. பேச வேண்டியதும் கூட. அதை வித்தியாசமான முறையில் திரைக்கதையாக்கி உள்ளார் இயக்குநர். திருநங்கைகள் திருநம்பிகள் சார்ந்து அவர் சிந்தித்துள்ள விசயம் பாராட்டத்தக்கது தான். ஆனால் அதற்குள் ஒரு கமர்சியல் சினிமாவிற்கான திரைமொழி சாத்தியமாகவில்லை. அதைச் செய்திருந்தால் அதர்ஸ் பெரிதாக ஜெயித்திருக்கும்
2.5/5