ஆரியன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

‘Not ராட்சசன்’ என்று விஷ்ணு விஷால் சொன்னாலும் படம் ராட்சசன் ஸ்டைலில் தான் பயணிக்கிறது

படத்தின் துவக்கத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் செல்வராகவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறார். அடுத்தடுத்த நாட்களில் அவர் வீடியோக்கள் வெளியிட்டு சிலரைக் கொல்லப்போவதாகச் சொல்கிறார். செத்தவர் எப்படி வீடியோ போட முடியும்? அவர் சொன்னதைப் போலவே கொலைகள் நடந்ததா? ஹீரோ விஷ்ணு விஷால் இதை எப்படி ஹேண்டில் செய்தார்? என்பதே படத்தின் கதை

லெப்ட் ஹேண்டில் டீல் பண்ற கேரக்டர் என்பதால் விஷ்ணு விஷால் அசால்டாக நடித்துள்ளார். பிட்னெஸாகவும் கச்சிதம். ஆனால் மீசை மழிக்கப்பட்ட அவரது முகம் நமக்கு சற்று அந்நியமாக தெரிகிறது. செல்வராகவன் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்தாலும், ஓவர் ஆல் ஓகே தான்.ஹீரோயின்கள் மானசா செளத்ரி, ஸரத்தா ஸ்ரீநாத் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களுக்குப் பெரிதாக வேலை கொடுக்கப்படவில்லை என்பது வேறு.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் ஆரியனை இன்னும் வீரியத்தோடு காட்டியிருக்கலாம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒகே ரகம் தான். But பின்னணி இசையை சிறப்பாக கொடுத்து அதை நேர் செய்துவிட்டார்

இயக்குநர் ப்ரவின் கே கதையாக எடுத்துக்கொண்ட ஐடியாலஜியே தப்பாக தெரிகிறது. நல்லவர்களை உலகம் அடையாளம் கண்டு கெளரவிக்கப்படவில்லை என்பதால் அவர்களைக் கொலை செய்து, அந்த மரணங்களின் மூலம் அவர்களை வெளிச்சப்படுத்துவேன் என்பது சுத்த புல்ஷிட்! நல்லவேளை ஹீரோ கேரக்டர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. ஹீரோ கேரக்டர் வலுவில்லாததாலும், அவரது உழைப்பும் கண்டுபிடிப்பும் படத்திற்குள் கவனம் ஏற்படாமல் போவதாலும் படம் பப்படமாக பல்லிளிக்கிறது. ஒரே ஆறுதல் கனெக்ட் ஆகாவிட்டாலும், படம் போரடிக்கவில்லை
2.5/5