ஆழி- விமர்சனம்

ஒரு சர்வைல திரில்லரில் வில்லனாக களமிறங்கியுள்ளார் சரத்குமார்
நாகர்கோவில் பேக்ராபில் நடக்கும் கதை. சொந்தமாக கப்பல் வைத்திருக்கும் சரத்குமார் மிகப்பெரிய கொள்ளைக்காரரும் கூட. அவருக்கு அழகான மகளாக தேவிகா இருக்கிறார். கல்லூரி செல்லும் அவர் உடன் படிக்கும் ஜெகஜித் மீது காதல்கொள்கிறார். அந்தக் காதலை துப்பறியும் சரத்குமார் ஜெகஜித்-ஐ கடத்தி கடலுக்கு கொண்டு செல்கிறார். இனி கடலில் நடக்கும் ஆக்சன் மற்றும் திரில்லர் மேளா தான் படத்தின் கதை
வில்லனாக இருந்தாலும் இறுதியில் சற்று தன் இறுக்கத்தைக் குறைத்துக்கொள்கிறார் சரத்குமார். ஆல்ரெடி அவர் தேர்ந்த வில்லன் என்பதால் இப்படத்தில் இந்தக் கேரக்டரை ஈசியாக செய்கிறார். ஜெகஜித்திற்கு இது மிக நல்ல கேரக்டர். இன்னும் அதை அவர் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். தேவிகா அழகாக இருக்கிறார். சிறப்பாக நடிக்கிறார். ஆனால் படத்தில் அவர் போர்சன் குறைவாகவே இருக்கிறது
படத்தில் ஒளிப்பதிவு மற்றொரு ஹீரோ. ஒளிப்பதிவாளர் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் கொடுத்த வேலைக்கு குறைவைக்கவில்லை. ஒருபாடல் மிகவும் சிறப்பாக இருந்தது
மாதவ் ராம்தாசன் இயக்கியுள்ளார். மேக்கிங்-ஆக நல்ல மெச்சூட் இருக்கிறது தான். ஆனால் கதை? பழசோ பழசு. ராமராஜன் காலத்து கதை என்றாலும் பரவாயில்லை. இது காமராஜர் காலத்து கதை. திரைக்கதையிலும் புதிதாக ஒன்றுமில்லை
ஆழி- காலி
2.25/5